ரூ. 2.5 கோடி பெறுமதியான “ராவண கல்/சுலைமான் கல்லுடன்” இருவர் கைது!*
கிண்ணியா – கண்டி வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் வைத்து ரூபா இரண்டரை கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற அபூர்வ கல்லொன்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது!
நேற்று (23.07.2026) மாலை 10:00 மணியளவில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையிலேயே இக்கல் கைப்பற்றப்பட்டது. அதனுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கல்லின் விவரங்கள்:
நீளம்: 4 அங்குலம்
சுற்றளவு: 6 ½ அடி
நிறை: 550 கிராம்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மீட்கப்பட்ட கல்லையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

