புதினங்களின் சங்கமம்

அவனா இவன்! அம்பாறை பெண் மருத்துவர் கொலை சூத்திரதாரி இவ்வளவு கொடியவனா?

கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் காதலன் என கூறப்படும் நபர், தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் கண்டி பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

10 இடங்களில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.இருந்த போதிலும், அவர் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் மூத்த சகோதரர் பொலிஸாரிடம் தகவல் வெளியிடும் போது, சந்தேகநபர் சிறுவயது முதலே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு பலரை ஏமாற்றி பணம் மற்றும் பல்வேறு பொருட்களைப் பெற்ற ஒரு ஏமாற்றுக்காரன்.

“எனது தம்பி என்ற போதிலும் அவரின் முகத்தைக் கூட பார்க்க நான் விரும்பவில்லை. அவன் அந்தளவிற்கு மோசமான செயல்களைச் செய்யும் வெறுக்கத்தக்க ஒரு மனிதன்.

சந்தேக நபர் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவாக உள்ளார் என எனச் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

இவர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் புலனாய்வு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x