Home புதினங்களின் சங்கமம் இரணைமடுக்குள வான் கதவுகள் சற்று நேரத்தில் திறக்கப்படும்!! அவதானம் மக்களே!!

இரணைமடுக்குள வான் கதவுகள் சற்று நேரத்தில் திறக்கப்படும்!! அவதானம் மக்களே!!

இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துச் செல்வதால் அதன் வான் கதவுகள் இன்று (டிசெ.6) வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் திறக்கப்படும் என்று மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.

அதனால் பன்னங்கண்டி, சிவபுரம், கண்டாவளை, தட்டுவன்கொட்டி, சிவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கடும் மழையால் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் இடரைச் சந்தித்துள்ளனர்.

கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தமாகுமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.