புதினங்களின் சங்கமம்

குருநாகலில் தனது கணவனின் கள்ளக் காதலியின் அந்தரங்கப் பகுதியில் 47 முறை கத்தியால் குத்திக் கொன்ற மனைவிக்கு மரண தண்டனை! நடந்தது என்ன?

தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக, குருணாகல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் குருணாகல் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

மல்கடுவாவ, குருணாகல் பகுதியைச் சேர்ந்தவருக்கே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், இரு பிள்ளைகளின் தாயாவார்.

47 முறை கத்திக் குத்து
கொலை செய்யப்பட்ட பெண், தண்டனை விதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் வீட்டிற்குள் வைத்துதான் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து கத்தியைப் பறித்து, தற்காப்புக்காகவே தான் அவரைக் குத்தியதாகத் தண்டனை பெற்ற பெண் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார்.

எனினும், அந்தப் பெண் மீது மொத்தம் 47 முறை கத்திக் குத்துகள் நடத்தப்பட்டிருந்ததைக் கருத்திற்கொண்ட நீதிமன்றம், அவரது தற்காப்பு வாதத்தை நிராகரித்து, அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x