புதினங்களின் சங்கமம்

பொலிஸாருக்கு தர்மஅடி! பட்டப்பகலில் போர்க்களமாக மாறிய தெரணியகல!

போதைப்பொருளைத் தேடுகிறோம் என்ற பெயரில் அத்துமீறி ஒரு வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார், அங்கிருந்த அப்பாவி இளைஞர்களை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர்.

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களே, அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்ட இந்தச் செயல் அங்கிருந்தோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தாக்கியதோடு நிறுத்தாமல், பொலிஸார் தங்களோடு கையில் கொண்டு வந்திருந்த போதைப்பொருளை, அந்த இளைஞர்கள் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்தி அவர்களைக் குற்றவாளிகளாக்க சதி செய்துள்ளனர்.

தங்களின் எதிர்காலத்தை அழிக்கத் துணிந்த இந்த அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த இளைஞர்கள், தங்களைப் பாதுகாக்க பொலிஸாருடன் தைரியமாக மோதலில் குதித்தனர். இதனால் அந்த இடமே பெரும் பதற்றத்துடன் போர்க்களமாக உருவெடுத்தது.

அப்பாவிகள் மீதான இந்த அராஜகம் காட்டுத்தீயாய் பரவ, அப்பகுதி இளைஞர்கள் மேலும் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அநீதிக்கு எதிராக கைகோர்த்தனர்.

ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பட்டாளம், தப்பிச்செல்ல முயன்ற அத்துமீறிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் மடக்கிப் பிடித்து, சிறைவைத்து தர்மஅடி கொடுத்து தங்களின் மொத்த கோபத்தையும் தீர்த்துக் கொண்டுள்ளனர்.

இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, சட்டத்தின் காவலன் என மார்தட்டும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் பணப்பையை (Wallet) இளைஞர்கள் சோதனையிட்டபோது ஒட்டுமொத்த உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது!

அவரிடமிருந்து கொடிய ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த இந்த சம்பவம், வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறி, ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x