புதினங்களின் சங்கமம்

என்னால் இரவில் அவரை அடக்க முடியாது!! எனது அம்மாவுடன் படுக்க விட்டுவிடுவேன்! அம்மா சமாளிப்பார்! யுத்தம் தந்த விளைவு!! தாயையும் மகளையும் கர்ப்பமாக்கி மன்மதராசாவாக மாறிய தர்சன்.

சிங்கள PHM ஒருவரின் சமூகவலைத்தளப் பதிவிலிருந்து அப்படியே மொழி பெயர்த்து தந்துள்ளோம்.

தற்போது ஓய்வு பெறுவதையிட்டு சந்தோசமாக உள்ளது. மனதில் பலவித நெருடல்கள். கிராமங்களில் குடும்பப் பெண்களிடம் செல்லும் ஒவ்வொரு தரிசிப்புக்களும் வித்தியாசமானவை. 2019 ம் ஆண்டு. அநுராதபுரம் குடுகமவுக்கு மாற்றம் பெற்றேன். காடும் வயலும் சார்ந்த ரம்யமான பகுதி. மக்கள் வெள்ளந்தியானவர்கள். பயங்கரவாதிகளுடனான போரில் பல இராணுவ வீரர்களை, இராணுவ அதிகாரிகளை பலி கொடுத்த பூமி. ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒரு ஆண் பாதுகாப்பு பிரிவில் இருக்கின்றார். இருந்துள்ளார். பல இராணுவ வீரர்கள் காணாமல் போயும் இறந்துமுள்ளார்கள். பல இளம் குடும்பப் பெண்கள் விதவைகளாக மாறியுள்ளார்கள்.

மகாகனதரவ குளத்திற்கு அருகில் களிமண்ணும் தடிகளாலும் பல குடிசைகள் கட்டப்பட்டிருந்தன. அன்று அந்தப் பகுதியில் கர்ப்பிணிகள், குழந்தை பெற்றவர்களின் விபரங்களைப் பரிசோதிப்பதற்கான கடமை . அங்கு சென்றேன். குடிசை ஒன்றில் அவள் ஒரு நிறை மாத கர்ப்பினியாக அழகான தோற்றத்துடன் நின்றாள். வயது 19. வீட்டுக்குச் சென்றேன். வரவேற்றாள். அவளது குடும்ப விபரங்களை பதிவு செய்து கிளினிக் திகதியை குறித்து கொடுத்து வெளியேற முற்பட்ட போது இளமை தோற்றம் குறையாத அவளைப் போல் இன்னொரு உருவம் கொண்ட 40 வயது மதிக்கத்தக்க பெண் அங்கு வந்தாள். அவள் யார் என நான் கேட்ட போது எனது அம்மா என்றாள். அவளுடனும் கதைத்து விட்டு வெளியேறி சிறிது துாரம் சென்ற பின் அவள் என்னை கூப்பிட்டாள். நான் நின்றேன். ”நோனா மட மாசே உனே நே” என கூறிய போது நான் ஆச்சரியப்பட்டேன். மகளும் கர்ப்பம், தாயும் கர்ப்பமா? என சிந்தித்த பின் கிளினிக் சென்றருக்கு வரச் சொல்லி பரிசோதனை செய்த போது அவள் கர்ப்பமாக இருந்தாள்.

இது வழமையாக சாதாரண நிகழ்வாக இருக்கலாம். ஆனால் என்னை அதிர்ச்சி அடையச் செய்த விடயம் என்னவெனில் அவளது கணவன் 2006ம் ஆண்டு பயங்கரவாதிகளுடனான யுத்தத்தில் காணாமல் போய் 19 வருடங்கள் ஆகின்றன. நான் அவளுக்கு ”மாத்ரு சடஹன் பத” ( கர்ப்பிணி பதிவு புத்தகம்) பதிவதற்காக கணவனின் பெயரை கேட்ட போது தர்சன என கூறினாள். ஏற்கனவே மகளின் கணவருக்கும் அதே பெயர்தான் அட்டையில் பதிந்தேன். அந்த ஞாபகத்தில் இது மகளின் கணவரின் பெயர் அல்லவா என கேட்ட போது ஒவ் (ஆம்) என்று சொன்ன அவள் தனது கர்ப்பத்திற்கும் அவர்தான் காரணம் என கூறிய போது அதிர்ந்தேன். என்னால் இதை சாதாரணமாக எடுத்தக் கொள்ள முடியவில்லை. அவளை விலாவாரியாக விசாரித்தேன். அப்போதுதான் அவள் தனது கணவர் காணாமல் போன தகவலையும் அதன் பின் ஒரே குடிசையில் ஒன்றாக இருப்பதையும் கூறினாள். மிகவும் சாதாரணமாக கூறிக் கொண்டிருந்தாள்.

மகளின் கணவருக்கு 30 வயது. மகாகனதரவ குளத்தில் மீன் பிடிப்பது, விவசாய கூலி வேலை செய்வது, காட்டுக்குள் தேன், விலங்குகள் வேட்டையாடுவது என பல வேலைகள் மகளின் கணவர் செய்து வந்துள்ளார்.தனக்கும் (18 வயது) கணவருக்கும் (22 வயது) 2004ம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும் திருமணம் நடந்து ஒருவருடத்தில் தனது கணவன் இராணுவத்தில் சேர்ந்ததாகவும் அப்போது தான் கர்ப்பிணியாக இருந்ததாகவும் கூறினார். வடக்கு பகுதிக்கு யுத்ததிற்கு சென்ற கணவர் அதன் பின்னர் திரும்பி வரவில்லை என கூறினார். இராணுவத்தை விட்டு தப்பி ஓடி விட்டதாக தனக்கு அதிகாரிகள் கூறினார்கள் என்றும் அதனால் தனக்கு அவரது சம்பளம் மற்றும் எந்தவித உதவித் தொகையும் தரவில்லை எனவும் கூறினாள். அவர் தப்பிச் செல்லவில்லை. கொட்டி அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டது என கூறினாள். அதன் பின்னர் நிறை மாத கர்ப்பிணியாக தந்தையுடன் சேர்ந்து கூலி வேலை செய்து வந்ததாகவும் தந்தையும் 2015ம் ஆண்டு குளத்தில் மீன் பிடிக்கும் போது இறந்து விட்டதாகவும் கூறினார். சிரமப்பட்டு மகளை வளர்த்தேன். தற்போது அவள் காதலித்து அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவனை திருமணம் முடித்துள்ளாள். அவருக்கும் நிரந்தரத் தொழில் இல்லை. அத்துடன் இரவில் குடித்துவிட்டு மகளை துன்புறுத்துவார். அதனைப் பொறுக்க முடியாது நான் அவருடன் இணைந்தேன். இதனால் மகளு்ககு சற்று நிம்பதி என கூறிய போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இதனை எனது மேலதிகாரியான பெண் வைத்தியருக்கு கூறினேன். அவர் இதற்கு எந்தவித நடவடிக்கையும் நாம் எடுக்க வேண்டாம். சட்டரீதியாக அப்பிரதேசத்து அதிகாரிகள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் சரி. நாம் அவரின் கர்ப்பத்தை பாதுகாப்போம். இது போல் இங்கு ஏராளமான சட்டச் சிக்கல்களுடன் கூடிய திருமண உறவுகள் உள்ளன. இவற்றை நாம் கருத்தில் எடுத்தால் எதுவும் செய்ய முடியாது என கூறினார். எனது மனத்தில் பாரிய சுமை ஏற்பட்டது. அந்த 19 வயது அப்பாவி கர்ப்பிணிப் பெண்ணுக்கு இது தெரியுமா? அவள் இதை தாங்குவாளா? என கவலையடைந்தேன். இருவரையும் கர்ப்பமாக்கிய அந்த வீரனை நேரில் சந்திப்பதற்கு கடும் முயற்சி எடுத்தேன். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. காலை 6 மணிக்கு வேலைக்கு போனால் இரவு 7 மணிக்குத்தான் வீடு திரும்புவாராம் அந்த வீரர்.

ஓரிரு மாதங்களில் அவள் குழந்தை பெற்றுவிட்டாள். அவளது தாயார் 6 மாத கர்ப்பிணி. வீட்டுத் தரிசிப்புக்காக அவளிடம் சென்றேன். அழகான அந்த முகம் வாடாது இருந்தது. அம்மாவின் கர்ப்பதிற்கு யார் காரணம் என்று தெரியுமா? எனஅவளிடம் மெதுவாக கேட்டேன். உடனே ஒவ் என்றாள். எனது கணவர்தான். அவர் குடித்துவிட்டு வந்தால் அவரை என்னால் அடக்க முடியாது. எனது அம்மாவுடன் சென்று படுக்குமாறு கூறி விடுவேன். அம்மா அவரை சாந்தப்படுத்தி துாங்க வைத்துவிடுவார். அவர் பாவம்…. தொடர்ச்சியாக வேலை செய்து களையுடன் வருவார். அதனால் குடிப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. என கூறிய போது அதைக் கேட்ட பின் வீட்டை விட்டு வெளியேறி வந்த பின்னரும் எனது தலை சுற்றிக் கொண்டிருந்தது.

அதன் பின்னர் அப்பகுதியில் நான் விசாரித்த போது தர்சன் தனது 19 வயதிலிருந்து அந்த குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதாகவும் தர்சனின் மனைவியின் தாயார் கணவன் இறந்த பின்னர் இரு தடவைகள் கர்ப்பமாக குழந்தை பெற்று அக் குழந்தைகளை பெருமளவு பணத்திற்கு பணக்காரர்களுக்கு சட்டரீதியாக அவர்களு்ககு பதிவு செய்த கொடுத்துள்ளது தெரியவந்தது. இவ்வாறான நடவடிக்கைகள் அப்பகுதியில் அநேகமாக இடம்பெறுகின்றன. அதற்கு அநுராதபுரத்தில் உள்ள சில சுகாதாரதுறையைச் சேர்ந்தவர்களும் ஒத்துழைப்பு கொடுக்கின்றார்கள் என்பதை பின்னரே அறிந்து கொண்டேன்.

இலங்கையில் இவ்வாறன சம்பவங்களை நன்றாக ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x