அமெரிக்கா போயும் ஆமத்துறுவின் குஞ்சுமணிக்கு பசி அடங்கவில்லை!! சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பொலிசாரால் கைது!!
அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பாலியல் சேவைகளைப் பெற முயன்ற குற்றச்சாட்டில் கைதான இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்கு, தனது பல்கலைக்கழகப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
ஆட்கடத்தல் மற்றும் வணிக ரீதியிலான பாலியல் தொழிலை ஒடுக்குவதற்காக பொஸ்டன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘ஒப்ரேஷன் ரெட் கார்ட்’ (Operation Red Card) என்ற விசேட இரகசிய நடவடிக்கையின் கீழ், கடந்த சனிக்கிழமை ‘ரிவியர்’ (Revere) ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான 32 வயதான மஹாயாயே வினீத தேரர், அமெரிக்காவின் புகழ்பெற்ற டஃப்ட்ஸ் (Tufts) பல்கலைக்கழகத்தில் பௌத்த மத ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் பிறந்து தனது 10 ஆவது வயதிலேயே துறவறம் பூண்ட இவர், 2022 ஆம் ஆண்டு ஹார்வர்ட் (Harvard Divinity) பாடசாலையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2024 டிசம்பர் முதல் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் தியான நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீகப் போதனைகளை நடத்தி வந்துள்ளார்.
பணத்திற்குப் பாலியல் சேவைகளைப் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் வினீத தேரர் உட்பட கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களுக்கும் எதிராக பொஸ்டன் மத்திய மாநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், இதற்கான விரிவான வழக்கு விசாரணை எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

