புதினங்களின் சங்கமம்

ஆலயமொன்றில் இரு இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட ஆலய தலைவர் உட்பட 7 பேர் கைது!

துறைநீலாவணை உச்சிமா காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது சில இளைஞர்களுக்கும் நிருவாக சபையினருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து இரு இளைஞர்கள் மீது ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் உட்பட்ட சிலர் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை முன்னெடுத்திருந்தனர்
இத் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட துறைநீலாவனை பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு (31) இடம்பெற்று உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இருவர் தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இத் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
பொலிஸாரினால் மேல்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோயில் பரிபாலன சபை தலைவர் உட்பட 7 நபர்கள் கைதுசெய்யப்பட்டு அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்திய பின் இன்று களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் கைதுசெய்யப்பட்ட ஏழு நபர்களையும் எதிர்வரும் 9 திகதி வரை விளக்கமறியலில் வைக்க களுவாஞசிக்குடி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.