சினிமா பட பாணியில் இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் ! 2 வங்கிக் கணக்குகளில் 8 கோடி! சிக்கினார் நீர்கொழும்பு போதைப்பொருள் முதலை!
சினிமா பட பாணியில் இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மற்றுமொரு பாரிய நிதி மோசடி அம்பலமாகியுள்ளது! நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணையில், பொலிஸாரே திகைத்துப் போகும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சந்தேக நபரைக் கைது செய்து அவரது நிதிப் பின்னணியை ஆராய்ந்தபோது, இரண்டு முன்னணி தனியார் வங்கிகளில் உள்ள அவரது கணக்குகளில் சுமார் 8 கோடி ரூபாய் (80 மில்லியன்) பணம்
குறித்த கடத்தல்காரர் நேரடியாகக் களத்தில் இறங்காமல், ஒரு பெரிய முகவர் பட்டாளத்தையே இயக்கி வந்துள்ளார்.
இந்த முகவர்கள் தினமும் போதைப்பொருட்களை விநியோகித்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை அன்றாடம் வங்கிகளில் வைப்பு செய்துள்ளனர்.
சந்தேகத்தைத் தவிர்க்கும் வகையில், பல தடவைகளாக இந்தப் பணம் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிரிவின் மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த 8 கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது? இதன் பின்னணியில் உள்ள ஏனைய “முதலைகள்” யார்? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் கணக்குகளை முடக்குவதற்கும், முகவர்களைக் கண்டறியவும் சிசிடிவி ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
நீர்கொழும்பில் முறியடிக்கப்பட்டுள்ள இந்த பாரிய நிதி வலையமைப்பு, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு விடுக்கப்பட்ட பலத்த எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது!

