Home புதினங்களின் சங்கமம் சுவிஸ்லாந் பேரூந்து தீ விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் தினேஸ் பலி!

சுவிஸ்லாந் பேரூந்து தீ விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் தினேஸ் பலி!

சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த 5 பேரில், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட, 30 வயதான தினேஸ் என்ற இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து ஜனாதிபதி, உயிரிழந்தவர்களுக்கான இறுதி அஞ்சலியைச் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.