புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் 51 வயது யாழ் குடும்பப் பெண் விஜயஸ்ரீயையும் 21 வயது மகளையும் கட்டி வைத்து கற்பழித்த பின் கொலை செய்த நிரோஜன்!! தண்டனை எப்போது?

பிரான்ஸ் நாட்டை அதிர வைத்த இரட்டை கொலை. வரும் ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் என்ன தண்டனை கிடைக்கப் போகின்றது, என்பதை எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் உலகத்தமிழர்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி நடைபெற்ற இந்த கொடூரமான இரட்டைக் கொலையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
என்ன நடந்தது ? 2018 ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து பிரான்சுக்கு அகதியாக வருகின்றார் நிரோஷன், என்கின்ற இளைஞர். இவர் அகதியாக வந்து தனது உறவினர்களான விஜயஸ்ரீ என்கின்ற பெண்மணியின் வீட்டில் தங்குகிறார் விஜயஸ்ரீக்கு 51 வயது அவரது மகள் திலக்ஷனாக்கு 21 வயது.விஜயஸ்ரீயின் வீட்டில் தங்கி இருந்து தனது அகதி விசாவுக்கான வேலைகளை செய்து வந்தார் இந்த நிரோஷன்.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி இரவு விஜயஸ்ரீயின் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார், வீட்டுக்கு வந்தவர் வீட்டில் மனைவி வைதேஸ்ரீ மற்றும் மகள் திலக்ஷனாவும் மிகக் கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு கிடந்தார்கள். மனைவிக்கு 30க்கும் மேற்பட்ட கத்தி குத்துக்களும் மகளுக்கு 13 க்கும் மேற்பட்ட கத்தி குத்துக்களுடன் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்கள்.
உடனடியாக போலிசார் வரவழைக்கப்பட்டார்கள் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தடையங்கள் எல்லாம் மிகக் கச்சிதமாக அழிக்கப்பட்டு இருப்பதை கண்டார்கள். எந்த ஒரு தடயங்கள் கைரேகைகள் மற்றும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்திகள் போன்று எதையுமே அங்கு காணக் கிடைக்கவில்லை. போலீசார் விசாரணையை தொடங்கி விஜயஸ்ரீ மற்றும் திலக்ஷனா ஆகியோரின் உடலில். ஏதும் டிஎன்ஏக்கள் இருக்கின்றதா என்பதை பரிசோதித்தனர்.அப்போது மகள் திலக்ஷனாவின் கை விரல் நகத்தில் நிரோசனின் டி என் ஏ இருந்ததை கண்டுபிடித்தார்கள் இதைத் தவிர வேறு ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

நிரோசனை கைது செய்து மேல் அதிக விவரங்களை தேடிய போது நிரோஷன் இதற்கு முன்னரும் இரண்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி என்று தெரிய வந்தது அது மட்டுமன்றி பரிஸ் புறநகரில் வழிப்பறி கொள்ளைகளிலும் மக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களுடனும் இவர் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.
திலக்ஷனா மேல் இருந்த மோகத்தால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் விசாரித்தது குறிப்பிடத்தக்கது ஏனெனில் நிரோஷன் ஏற்கனவே இரண்டு பாலியல் சம்பவங்களில் தொடர்பு பட்டிருந்தார் இந்த விடயம் இவர் தங்கி இருந்த வீட்டாருக்கு தெரியாமல் இருந்தது. தன்னை தங்க வைத்து தனக்கு உதவிய தாயையும் மகளையும் கொடூரமாக கொன்ற நிரோஷனை வரும் ஏப்ரல் மாதம் போலீசார் நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்கள் .
டி என் ஏ சான்றைத் தவிர வேறு என்ன ஆதாரங்களை சமர்ப்பிக்க போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ஆனாலும் இந்த நிமிடம் வரை இந்த கொலையை நிரோஷன் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இருவரையும் நிரோஜன் கட்டி வைத்து வல்லுறவுக்குள்ளாக்கிய பின் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். இருப்பினும் இருவரது பெண் உறுப்பிலும் கற்பழிக்கப்பட்டதற்கான நிரோஜனின் விந்தணுக்கள் காணப்படவில்லை என்பதால் நிரோஜன் ஆண் உறை ஏதாவது பாவித்து இவர்களுடன் உறவு கொண்டிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றார்கள்.

முன்னர் நாம் வெளியிட்டிருந்த செய்தி இது

யாழ் உரும்பிராயைச் சேர்ந்த தாயும் மகளுமே பிரான்சில் வெட்டிக் கொலை!! எதற்காக கொல்லப்பட்டார்கள்?? (Photos)