புதினங்களின் சங்கமம்

ஐஸ் போதைப் பொருள் காவாலிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட மீனவன்i அதிர்சிக் காட்சி

கடந்த சில நாட்களுக்கு முன் மட்டக்களப்பு சுவிஸ் கிராமம் பகுதியில் ஐஸ் போதை பொருட்களை பாவித்து நிறை போதையில் நின்ற காவாலிகள் அப்பகுதி ஊடக கடலுக்குச் சென்று வீடு திரும்பிய மீனவன் மீது கொடூரமாக தாக்கப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான ரயில்வே கடவையில் போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
அப்பகுதியால் சென்ற சிலர் அவர் தண்டவாளத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த அவரை அவதானித்த சிலர் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த ஐஸ் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் காவாலிகள் சுவிஸ் கிராமப் பகுதியில் பல குற்றச்செயல்களுடனும் போதை வஸ்து பாவனக்கும் அடிமையானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
குறித்தபோதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பாக இதுவரைக்கும் கொக்குவில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது.
கொடூரமாக தாக்கி தண்டவாளத்தில் கட்டி வைத்துவிட்டு தப்பித்துச் சென்ற நபர்கள் இதுவரையும் வீடு திரும்ப வில்லை என அறிய முடிகின்றது.
குறித்த காவாலிகள் எங்காவது ஒளித்து இருந்தால் இவர்களைக் கண்டவர்கள் பக்கத்தில் உள்ள போலீசாரில் முறையிடவும்.
தற்போதைய சிங்கள இனவாத அரசு போதை ஒழிப்பு விடையம் ஊடகத்தில் மட்டுமே நடவடிக்கை எடுத்தாலும் கிராமங்களில் இந்த நிலை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
May be an image of one or more peopleMay be an image of one or more people and people smiling