யாழ் உட்பட தமிழர் பிரதேசங்களில் வெளிநாட்டு மோகம் கொண்ட ஏமாளிகளிடம் கொள்ளையடித்து வந்த பெரும் கொள்ளையன் பிடிட்டது எப்படி? வீடியோ
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி சிமியொன் பிலிப் றோய் என்பவன் reality future pvtd நிறுவனத்தின் மூலம் மோசடி செய்தமை தொடர்பாக கடந்த மாதம் 2025/10/22 ம் திகதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது . அத்தோடு பொலிஸ் மா அதிபரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய 2025/10/25 ம் திகதி மற்றும் 2025/10/27 ம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவன் தொடர்பாக நாம் வெளியிட்ட செய்தி கீழே தரப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விசரில் திரியும் வெங்காயங்களே!! இந்தப் பச்சைக் கள்ளனிடம் ஏமாற வேண்டாம்!!
இந்த முறைப்பாடுகளுக்கமைய மேலதிக விசாரணைகளை மேற்கோண்ட பொலிஸார் இந்த நபரை நானுஓயா பகுதியில் வைத்து கைது செய்து தற்போது நுவரெலியா நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.
மேலும் இவன் இதே போன்று பதுளை ஹாலிஎல பகுதியில் வசித்த பெண் ஒன்றை இதே போல் ஏமாற்றி பணம் மற்றும் நகைகள் அபகரித்தமை தொடர்பாக ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பதுளை நீதிமன்றம் வரை சென்று பின்னர் வழக்கு முடிவுறுத்தப்பட்டு குறித்த பெண் தற்போது வெளிநாட்டில் வசிக்கின்றார்.
மேலும் அந்த பெண்ணை ஏமாற்றி நகைகளை கொண்டு சென்று அடகு வைத்ததும் இவனது சகோதரியான பவுஸ்ரினா சிமியோன் என்பவள் தான் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நுவரேலியா கிளையில் பணிபுரிவதாகவும் சில நேரங்களில் தான் ஒரு சட்டத்தரணி என்றும் சில நேரங்களில் தான் ஒரு ஆசிரியை என்றும் விதம் விதமான கதாபாத்திரங்களில் நடித்து இவனுடன் சேர்ந்து வெள்ளை காரில் சென்று பண மோசடி செய்து வருகிறாள். இவன் செய்யும் அனைத்து மோசடிகளுக்கு இவள் தான் உடந்தை. இவர்கள் தொடர்பில் ஊர்மக்களிடம் விசாரிக்கும் போது இவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுகிறது.

இவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் இவர்களிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக எந்த பதிவுகளும் சட்டரீதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய எந்த பதிவுகளும் மேற்கொள்ளவில்லை என்பதும் இவர்கள் மோசடியாக மக்களை ஏமாற்றி வருகின்றனர் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ப்படுகின்றீர்கள்.











