புதினங்களின் சங்கமம்

யாழில் கள்ளுத்தவறணை குடும்பஸ்தர் அடித்துக் கொலை சம்பவம் – ஒருவர் சிக்கினார்!

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

கடந்த வெள்ளிக்கிழமை, புன்னாலைக்கட்டுவன் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றிற்குச் சென்ற குறித்த 56 வயதுடைய குடும்பஸ்தர் மீது, அங்கே மது அருந்திக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொலிஸ் நடவடிக்கை : இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றைய தினம் கீரிமலைப் பகுதியில் வைத்துச் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேகநபரைத் தேடும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
.