யாழ் திருநெல்வேலி மாரியம்மன் வீதி, சிவன் அம்மன் வீதிகளில் குப்பை போடும் இவன் யார்?
யாழ் திருநெல்வேலி மாரியம்மன் வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள ஒழுங்கைகளுக்குள் சைக்கிளில் வந்து பொதிகளில் கொண்டு வந்து குப்பைகளைப் போடும் இவனைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனடியாக நல்லுார் பிரதேசசபை காரியாலயத்திற்கு அறிவிக்குமாறு பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். அப்பகுதிகளில் குப்பை போடும் முக்கிய நபரான இவன் உணவுக் கழிவுகள் மற்றும் பல கழிவுகளை அப்பகுதி எங்கும் வீசிவருவதாக CCTV மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


