புதினங்களின் சங்கமம்

வெலிமடையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆமியும் மனைவியும்! மனைவியின் சடலம் மீட்பு!

வெளிமடை போகஹகும்பர பகுதியில் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக கந்தேபுஹுல் ஓயவில் இராணுவ அதிகாரி ஒருவரும் அவரது மனைவியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திக்வல்ல, வங்கியகும்புர , கந்தேபுஹுல்பொல பகுதியில் வசிக்கும் 37 வயதுடைய இராணுவ உத்தியோகத்தர் ஒருவரும் 33 வயதுடைய அவருடைய மனைவியுமே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் அவர்களுக்கு சொந்தமான வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக வீட்டுக்கு செல்வதற்காக கந்தேபுஹுல்பொல ஓயவை கடக்க முற்பட்ட வேளையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேச வாசிகளும் பொலிஸாரும் இணைந்து தேடுதலை மேற்கொண்டு பெண்ணின் உயிரிழந்த உடல் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவரது கணவரை இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பொரலந்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ,நீரில் அடித்துச் செல்லப்பட்ட இராணுவ அதிகாரியை தேடும் பணிகளில் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் , இராணுவத்தினரும், பிரதேச மக்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்டு வருவதாக போகஹகும்பர பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா