புதினங்களின் சங்கமம்

யாழில் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த தங்கராசா யாழ் பஸ் நிலையத்தில் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் பேருந்து தரப்பிடமொன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றில்  , முதியவரின் சடலம் காணப்படுவதாக சுன்னாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த முதியவர் கடந்த 03 ஆண்டு காலமாக குடும்பத்தை பிரிந்து யாசகம் பெற்று , பொது இடங்களில் தங்கி வாழ்ந்து வந்தார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.