புதினங்களின் சங்கமம்

யாழ் நல்லுாரில் அத்தானின் மகனை உள்ளே போட்டும் அடங்காத போதை வெறி!! அரசடியில் தென்பகுதி காவாலி பிடிபட்டான்!

கொழும்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (6) யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதை தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முனெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை குறித்த பகுதியிலேயே சைக்கிள் கட்சியின் மாநகரசபை உறுப்பினர் அத்தான் எனப்படுபவனின் மகன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.