புதினங்களின் சங்கமம்

‘கொஞ்சம் இரு வாறன்‘…”எங்கையண்ணை போறியள்?” – “செருப்பெடுக்க”

தம்பி! தம்பி! ஏனடா தலையில அடிச்சுக்கொண்டு வாறாய்? ஆரடா செத்தது?”

“ஐயோ! ஐயோ! எரியுதே! எரியுதே
அமேசன் எரியுதே! எரியுதே!
என்ர வயிறு பத்தி எரியுதே!”

“அதென்னடா அமேசன்?
அதெங்கடா இருக்கு அமேசன்?”

“ஐயோ ஐயோ அமெரிக்காவில… தென்னமெரிக்காவில இருக்கே…
அமேசன் காடு.
கடவுளே! பத்தி எரியுதாமே…!
ஐயோ! ஐயோ!”

“தம்பி! இஞ்ச வாடா”

“என்னண்ணை?”

“வில்பத்துக் காட்ட அழிச்சு வெட்டை ஆக்கிட்டாங்களாமடா தெரியுமோ?
அதுக்கு ஏதாவது செய்தனியோ?”

“இல்ல அண்ணை”

“ஒட்டிசுட்டானுக்குப் போறவழியில தேக்கங்காடு வெட்டி ஏத்தினவங்களாமே…
அதுக்கு ஏதாவது பண்ணினியோ?”

“இல்லை அண்ணை”

“காரைநகரில இருந்து இரவிரவா பனைமரம் கடத்தினவங்களாமடா அது தெரியுமோ? அதுக்கேதாவது செய்தனியோ?”

“இல்லை அண்ணை”

“தீவுப்பகுதியில இருந்து கள்ளமாடுகள் கடத்துறானுகளாம் அதுக்காவது ஏதாவது செய்தனியோ?”

“இல்லை. அண்ணையாணை தெரியாதண்ணை”

“அப்ப கொஞ்சம் இதில இரு வாறன்”

“எங்கையண்ணை போறியள்?”

“செருப்பெடுக்க”

நன்றி
முகப்புத்தகப்பதிவு