புதினங்களின் சங்கமம்

செல்லதுரை கொலவேந்நாதன் எனும் தமிழ் தொழிலதிபரை மிரட்டி கொள்ளையடித்த மனம்பேரியை கைது செய்ய உத்தரவு!!

தமிழ் தொழிலதிபர் ஒருவரை 16 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி அரிசி லாரியை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரியை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, அதற்கான பிடியாணையை செவ்வாய்க்கிழமை (30) பிறப்பித்தார்.
மித்தெனிய பகுதியில் இரண்டு ஐஸ் கொள்கலன்களை மறைத்து வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரான சம்பத் மனம்பேரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதை அடுத்து நீதிபதி இந்த பிடியாணையை பிறப்பித்தார்.
2009 ஆகஸ்ட் 12 ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் நாரஹேன்பிட்ட சந்திக்கு அருகில் கொள்ளையடிக்கும் பொதுவான நோக்கத்துடன் ஒரு சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாகச் செயல்பட்டதாகக் கூறி, பொலிஸ் அதிகாரிகள் போல் வேடமிட்டு, செல்லதுரை கொலவேந்நாதன் என்ற தொழிலதிபரை மிரட்டி, அவரது வசம் இருந்த சுமார் 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அரிசி லாரி, பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.