இந்தோனேசியாவில் பொலிசார் பிடித்த போது ஆடையுடன் மூத்திரம் போன இலங்கை பாதாளக்குழு கும்பல் கட்டுநாயக்கா வந்த காட்சி!! வீடியோ
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்ட கெஹல்பத்தர பத்மே உட்பட பாதாள உலகக் குழு தலைவர்கள் ஐவரும், சற்றுமுன்பு கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னைய செய்தி
பொலிசாரிடம் பிடிபட்ட போது ஆடையுடன் மூத்திரம் பெய்த இலங்கையை உலுக்கிய தாதாக்கள்!! நடந்தது என்ன?
அவர்கள் கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை அழைத்து வந்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
சில மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று (30) பிற்பகல் 3.30 மணியளவில் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தனர்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திரணக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவும் இதனை கண்காணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த ஜயசுந்தர ஆகிய அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியாவின் விசேட பொலிஸ் குழுவும் இணைந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேளை
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகங்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இந்த நாட்டில் நீண்ட காலமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
பாதாள உலகக் குழு குற்றங்கள் இந்த நாட்டு மக்களை தொடர்ந்து துன்புறுத்த அனுமதிக்கப்படாது என்றும், அதை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

