புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியிலிருந்து யாழ் செல்லும் வைத்தியரின் திருவிளையாடல்!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.. 
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக தினமும் நோயாளிகள் பணயம் வைக்கப்படும் அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்பில் பலரும் என்னிடம் சில மாதங்களாக தகவல்களை வழங்கி வந்தனர்.
அவசர மற்றும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலிருந்து நோயாளிகள் மாற்றப்படும் போது என்ன அவசரம் என்றாலும் பிற்பகல் 3.30 மணிக்கு பின்பே பெரும்பாலும் நோயாளிகளுடன் நோயாளர் காவு வண்டிகிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து புறப்படும்.
சில காலமாக இது தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது. அந்த பதவி நிலை வைத்திய அதிகாரி வீடு செல்வதற்காக ஒரு சில வைத்தியசாலை மேற்பார்வை உத்தியோகத்தர்கள் திட்டமிட்டு நோயாளிகளை யாழ்ப்பாணம் கொண்டு செல்லும் நேரத்தை தீர்மானித்து செயற்படுகின்றனர். அவசரமாக நண்பகல் நேரத்தில் நோயாளர் காவு வண்டி நோயாளியுடன் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலும் வைத்தியசாலையிருந்து வண்டி 3.30 மணிக்கு பின்பே புறப்படும். அவ்வாறு புறப்படும் நோயாளர் காவு வண்டியில் குறித்த அதிகாரியும் புறப்பட்டு வேம்படி சந்தியில் இறங்கிகொள்வார். இது பலருக்கும் தெரிந்தும் நாமக்கேன் வம்பு என்ற கணக்கில் புறுபுறுத்துவிட்டு கடந்து சென்றுவிடுகின்றனர்.
இப்படிதான் கடந்த 14.08.2025 ஒரு சம்பவம் கிளிநொச்சியை சேர்ந்த ஒரு நிறைமாத கர்ப்பிணி குழந்தை பிரசவிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரை அவசரமாக மேலதிக சிகிச்சைக்காக அனுப்ப வேண்டும். பகல் 12.05 மணிக்கு நோயாளியை அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு நோயாளர் காவு வண்டியும் தயார்ப்படுத்தப்பட்டுவிட்டது ஆனாலும் பிற்பகல் 3.45 மணி வரைக்கும் நோயாளர் காவு வண்டி வைத்தியசாலையினை விட்டு புறப்படவில்லை. வழமை போன்று மேற்பார்வை உத்தியோகத்தர் திட்டமிட்டு தாமத்தை ஏற்படுத்தினர்.
3.45 மணி நெருங்கியதும் அவசர அவசரமாக நோயாளர் காவு வண்டி அந்த மேலதிக சிகிச்சை தேவையான நிறைமாத கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு புறப்படும் போது வழமை போல குறித்த அதிகாரியும் ஓடி வந்து ஏறிக்கொண்டார். வைத்தியசாலையிலிருந்து புறப்பட்ட நோயாளர் காவு வண்டி ஏ9 வீதிக்கு வந்து தெற்கு பக்கமாக திரும்பியது. திடுக்கிட்ட அந்த அதிகாரி சாரதியிடம் எங்கே இந்த பக்கம் போறீங்கள் என்றிருக்கின்றார். மேடம் நோயாளியை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றேன். சாரதி ன பதிலளிக்க அப்போதுதான் அவருக்கு விளங்கியது இந்த வண்டி யாழ்ப்பாணம் செல்லவில்லை அநுராதபுரம் செல்கிறது என்பது. உடனடிய வண்டியை விட்டு இறங்கி சென்றுவிட்டார்.
நல்ல காலம் அதிகாரி கொஞ்சம் கண் மூடியிருந்தால் வேம்படி சந்தியில் இறங்க வேண்டியவர் யாழ்ப்பாணச் சந்தியில் இறங்கியிருப்பார்.
அதிகாரி வீடு செல்வதற்காகவே நோயாளிகள் பணயம் வைக்கப்படுகின்ற இவ்வாறன செயல்கள் பலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிகாரி தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரிடமும் முறையிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறித்த அதிகாரி வேலை முடிந்து புறப்படும் போது நோயாளர் காவு வண்டியும் புறப்பட்டால் அதில் ஏறி பயணிப்பதில் தவறில்லை. ஆனால் தான் பயணிப்பதற்காகவே நோயாளர்களை பணயம் வைப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
May be an image of ticket stub and text