கொழும்பில் பிரபல பாடசாலையில் போதையில் தள்ளாடிய மாணவிகள்!!
பிரபல்யமான பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில், மருதானை பொலிஸார் குறித்த மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இம் மாணவிகளில் இரு மாணவிகள், இந்த போதைப்பொருள் மாத்திரிகைகளை மட்டக்குளிய பிரதேசத்திற்குச் சென்று அங்கு ஒர் நபரிடம் அடிக்கடி வாங்கி பாடசாலைக்கு கொண்டு வருவதாகவும் விசாரணையின்போது தெரியவந்தது.
மேற்படி மாணவிகள் 2 குளிசைகள் பின்னர் 3 குளிசைகள் என பாடசாலையின் கழிவறைக்குச் சென்று இதை அருந்துவது தெரியவருகின்றது.
இது தொடர்பில் பாடசாலையின் அதிபர், மருதானை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து முறைப்பாடு செய்துள்ளார். பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் இம் மாணவிகள் 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

