விமான விபத்தில் குடும்பமாகப் பலியான டாக்டர் பிரதிக் ஜோஷியின் இறுதிக் நேர செல்பி கூறுவது என்ன? வீடியோ
இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்….
🔴#நொடியில் #சிதறிய பல வருட கனவு
டாக்டர் பிரதிக் ஜோஷி கடந்த ஆறு வருடங்களாக தனியாக லண்டனில் பணிபுரிந்து வந்தார். தனது மனைவிக்கும் மூன்று சிறிய குழந்தைகளுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை லண்டனில் அமைக்க வேண்டும் என்பதே அவரின் நீண்ட நாள் கனவு.
அந்த கனவை நனவாக்கும் நேரம் வந்துவிட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்ற திட்டமிடல், ஆவணப்பணிகள், பொறுமையுடன் காத்திருக்க—all came together.
இரண்டு நாட்களுக்கு முன், அவரது மனைவி, டாக்டர் கோமி வ்யாஸ் (அவரும் ஒரு மருத்துவரே), இந்தியாவில் தன் வேலையை ராஜினாமா செய்தார். பைகள் தயாராகிவிட்டன. நண்பர்கள், உறவினர்களிடம் விடைபெறப்பட்டது. எதிர்காலம் அவர்களை வரவேற்க காத்திருந்தது.
இன்று காலை, அவர்கள் ஐவரும்—நம்பிக்கையுடன், சந்தோஷத்துடன், நிறைய எதிர்பார்ப்புகளுடன்—Air India Flight 171-ல் லண்டன் புறப்பட்டனர்.
ஒரு செல்ஃபி எடுத்து தாம் லண்டன் செல்வதை உறவினர்களுக்கு அனுப்பினார்கள்.
“புதிய வாழ்க்கையின் முதல் அத்தியாயம்” என்று நினைத்து.
ஆனால்… அவர்களால் இந்தியாவை தாண்ட முடியவில்லை .
விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் பயங்கரமாக விபத்துக்குள்ளாகியது.
ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை
ஒரே சில நொடிகளில், பல வருடங்களாக கட்டியெழுப்பிய வாழ்க்கை சாம்பலாயிற்று. கனவுகள், பாடுகள், காத்திருப்புகள்—all gone.
இவ்வளவு தான் வாழ்க்கை . பகை , சண்டை துரோகங்கள் இன்றி கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து சிரித்து நல்லவர்களாக வாழ்வோம் .

