புதினங்களின் சங்கமம்

இவரை எந்தச் சிறைச்சாலையில் அடைப்பார்களோ?

கைது செய்யப்பட்ட  அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மோகன் கருணாரத்ன இந்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (09) அவர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பல மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்ற கைதி ஒருவரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்  மேஹான் கருணாரத்ன  பொலிஸ் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.