புதினங்களின் சங்கமம்

யாழில் படிப்பறிவு அற்றவர்களுக்கு பதவி கொடுக்கும் NPP கட்சி!! வேட்பாளர்களிடையே மோதல்!!

யாழ். வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை வேட்பாளர்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்தொழில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஜீவன் ஆகியோருக்கு வேட்பாளர்களால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமராட்சி கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களை கருத்தில் கொண்டு உங்களால் நியமிக்கப்பட்ட மாடசாமி செல்வராசா(ஷாம்)அவர்களை வடமராட்சி கிழக்கு பிரதேச சபை உறுப்பினராக நியமித்துள்ளீர்கள்.

எமது பிரதேசங்களில் அவரது செயற்பாடு எந்த வகையிலும் இல்லை. கல்வியறிவு குறைந்த நிலையில் இருப்பவரை குறிப்பாக எழுத வாசிக்க தெரியாத ஒருவரை அமைப்பாளராக நியமித்து திரும்பவும் வேறொரு பதவியை கொடுப்பது கட்சி சார்ந்து வடமராட்சி கிழக்கு வேட்பாளர்களாகிய நாம் நிராகரிக்கிறோம்.

எமது வேட்பாளர்களின் விருப்பத்திற்கு அமைய நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு வேட்பாளரை தெரிவு செய்கிறோம். நாங்கள் தெரிவு செய்யும் அந்த தகுதியுடைய நபரை நியமிக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம். என்று உள்ளது.

May be an image of ticket stub and text