புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் வீட்டில் மறைத்து வைப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள் அதிரடிப்படை சீருடைகளுடன் அதிரடிபடை வீரர் உட்பட இருவர் கைது!!

வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுக்கான ரவைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சீருடைகளுடன் நேற்று மாலை இருவர் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு போதைப்பொருள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரை கைது செய்தனர்.
அவரது வீட்டை மேலும் சோதனை செய்தபோது, பாவனைக்கு உதவக்கூடிய ரவைகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை சீருடைகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
May be an image of textNo photo description available.May be an image of textMay be an image of knife