புதினங்களின் சங்கமம்

16 ஆண்டுகள் கடந்து அடையாளம் காணப்பட்ட போராளி..!

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த ஆயிரக்கணக்கான மக்கள், போராளிகளினுடைய கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வன்மச் செயல்கள் பற்றி யாவரும் அறிவீர். இந்தச் செயல்கள் சர்வதேசத்தை உலுக்கிய விடயமாக காணப்படுகின்றது.

அந்த வரிசையில் ஊடகவியலாளர் இசைப்பிரியா மற்றும் மக்கள் போராளிகளை சுட்டுக் கொன்றதும், அவர்களை சித்திரவதை செய்ததும் மறக்க முடியாத உண்மையாகும். அதேபோன்று இசைப்பிரியாவின் வரிசையில் மல்லாவி பாலி நகரைச் சேர்ந்த உஷாலினி குணலிங்கம் (ஷாலினி) என்பவர் 16 ஆண்டுகள் கடந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.