புதினங்களின் சங்கமம்

யாழில் வீடு புகுந்து திருடிய கள்ளி ஜான்சியும் அவளது கூட்டாளிகளும் பிடிபட்டது எப்படி? Photos

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் 95ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகளை களவாடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி துர்நடத்தையில்  ஈடுபடும் ஜான்சி என்ற பெண் கோண்டாவில் பகுதியில் வீட்டு வேலைக்கு சென்று அங்கே தொலைபேசி ATM அட்டையை திருடி இணுவிலை சேர்ந்த நிரோ மற்றும் இனிஸ்ரன் எனும் காவாலிகளுடன் சாராயக்கடைக்குச் சென்று சாராயம் வாங்கியுள்ளனர். பணத்தை பறி கொடுத்த வீட்டு உரிமையாளர் கொடுத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த போலீசார் , வீட்டின் பாதுகாப்பு கமராக்களை சோதனை செய்ததன் அடிப்படையில் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , அவரே திருடியதாகவும் , திருட்டுக்கு மூன்று ஆண்கள் துணை போயிருந்த நிலையில் அவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , திருடிய பணத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானம் வாங்கி அருந்தியமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளனது.

விசாரணைகளின் பின்னர் அவர்களை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , அவர்களை 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

May be an image of 1 person and treeMay be an image of 1 person, beard and text that says "15 ATM திருடி சாராயம் வேண்டி. பிடிபட்ட கள்ளன் இனிஸ்ரன்"