புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பலருடன் உறவு கொண்டு சிறை சென்ற யுவதியை அறியாது கலியாணம் கட்டிய கனடா மாப்பிளை உயிர் விட முயற்சி! புறோக்கர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்திற்கு வந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமண பந்தத்தில் இணைந்த கனடா மாப்பிளை ஒருவர் இன்று அதிகாலை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். திருமணம் முடித்து மணமகள் வீட்டுக்கு 4ம் சடங்கிற்கு சென்ற வேளை அங்கு நிறை வெறியில் நின்ற மணமகளின் உறவுக்காரர் ஒருவர் மணமகள் தொடர்பான உண்மைகளை போட்டுடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணமகளான 24 வயதான யுவதி போதைப் பொருள் பாவித்தல் மற்றும் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தால் சிறைக்குப் போனவர் எனவும் தற்போது பிணையில் குறித்த பெண் வெளியே வந்துள்ளதாகவும் ஆனால் வழக்கு இன்னும் முடியவில்லை எனவும் உண்மையை போட்டுடைத்துள்ளார் மணமகளின் நெருங்கிய உறவுக்காரர். இதனால் கடும் அதிர்ச்சியுற்ற கனடா மாப்பிளை தற்கொலைக்கு முயன்று பெண் வீட்டாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மணமகள் தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்த காரணத்தால் இன்று காலை குறித்த திருமணத்தை முடித்து வைத்த கலியாணப் புறோக்கர் ஒருவர் மாப்பிளை வீட்டாரால் நையப்புடைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

யாழ் உரும்பிராய்ப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்மராட்சிப் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட குறித்த இளைஞன் 2010ம் ஆண்டு கனடா சென்றுள்ளார். முகத்தில் பிறப்பிலேயே குறைபாட்டைக் கொண்டதாலும் பெற்றோர் இல்லாத காரணத்தாலும் சகோதரர்கள் கனடாவில் வாழ்ந்து வந்ததாலும் குறித்த இளைஞனுக்கு நீண்டகாலமாக திருமணம் தடைப்பட்டு வந்துள்ளது. இந் நிலையில் தனது சமூகத்தைச் சேர்ந்த யாராவது வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பத்தில் பெண் எடுக்க ஆசைப்பட்டு கலியாணத் தரகர் ஒருவரிடம் தனது விருப்பங்களைக் கூறி பெண் பார்க்கச் சொல்லியுள்ளார் கனடா இளைஞன்.

இதனையடுத்து உரும்பிராய்ப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான அழகிய பெண் ஒருவர் தொடர்பாக புறோக்கர் மாப்பிளைக்கு தெரியப்படுத்தியுள்ளார். குறித்த பெண்ணுக்கு தந்தை இல்லை எனவும் தாயார் நோயாளி எனவும் யுவதி யாழ் நகர்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து அந்த சம்பளத்திலேயே இருவரும் வாழ்வதாகவும் கூறியுள்ளார் புறோக்கர். அதன் பின்னர் மாப்பிளை குறித்த யுவதி மற்றும் யுவதியின் தாயார் ஆகியோருடன் கதைத்து அதன் பின்னர் திருமணத்திற்கு நிச்சயம் செய்து கடந்த மாத நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு தனது இரு சகோதரர்களுடன் கனடாவிலிருந்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழைமை கலியாணம் நடைபெற்றுள்ளது. நேற்று மணமகள் வீட்டில் 4ம் சடங்கு மாப்பிளையின் ஏற்பாட்டில் தடல்புடலாக நடந்துள்ளது. அங்கு சாராயப் பார்ட்டியும் இடம்பெற்றுள்ளது. இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட மணப் பெண்ணின் இறந்த தந்தையின் தம்பியான சிறிய தந்தை நிறை வெறியில் மணமகனுக்கு தனது பெறாமகளின் திருவிளையாடல்களை வழக்கு இலக்கங்களுடன் போட்டுடைத்துள்ளார். இதன் உண்மைத்தன்மையை அறிவதற்காக மணமகளிடம் கேட்ட போது மணமகள் மௌனமாக அழுதவாறு இருந்துள்ளார். அதே நேரம் மணமகளின் தாயாரின் உறவுகள் சிறிய தந்தை மீது கடும் தாக்குதலை நடாத்தியதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னரே இன்று அதிகாலை மணமகன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். மணமகனின் ஒரு அண்ணன் கனடா செல்லாமல் இருந்துள்ளார். அவரும் அவரது உறவுகள் சிலரும் சேர்ந்து இன்று காலை 9 மணியளவில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடாத்தியதாகத் தெரியவருகின்றது. அந்தக் குடும்பஸ்தரே மாப்பிளைக்கு குறித்த யுவதியை பேசித் திருமணம் முடிக்க வைத்த புறோக்கர் ஆவார். தாக்குதலுக்கு உள்ளான புறோக்கர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணமகள் துர்நடத்தையால் சிறைக்குச் சென்றது தனக்கு தெரியாது எனவும் இன்னொரு திருமணத்தரகர் தந்த குறித்த பெண்ணின் குறிப்பை வைத்தே அப் பெண்ணின் குடும்பத்தை தொடர்பு கொண்டு கனடா மாப்பிளைக்கு திருமணம் பேசியதாகவும் புறோக்கர் கவலையுடன் தெரிவித்துள்ளாராம்.