புதினங்களின் சங்கமம்

தென்மராட்சியில் கொள்ளையடிக்கப்படும் கனிய வளம்!! இளங்குமரனுக்கு தெரியுமா?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

 

தென்மராட்சியின் கனிய வளமான அரச காணிகளாக காணப்படும் வேம்பிராய்,சரசாலை கோணாவளை, மந்துவில் பெரு நில பகுதியின் கற்பாறைகள் ,வெண்ணிற மக்கி, கல் அடிசல்லி மண்கலவை, கிரவலுக்கு ஒப்பானவை அகழப்பட்டு சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது .

சிறு ,பெரு அடர் காட்டுப்பகுதிகள் அழிக்கப்பட்டு பாரிய கிடங்குகள் குள வடிவில் காணப்படுகிறன.

இதற்கு சாவகச்சேரி பிரதேசசபை ,கனிய வள திணைக்களம் உடந்தையாக உள்ளது .

இவர்கள் இந்த காட்டுக்குள் கல்லுடைக்கும் ஆலை ஒன்று அமைக்க தனியாருக்கு கொடுக்கப்பட்டு இவர்களுடன் பலர் கூட்டு சேர்ந்து இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுகிறனர்.

அரச நிலத்தை அகழ்வதற்கு அனுமதி இருக்கா சம்பந்தபட்ட திணைக்களங்களே?

இவர்களுக்கு சாவகச்சேரி ,கொடிகாம பொலீஸ் முழுமையாக உடந்தை யாராவது அறிவித்தால் அந்த தனிநபர்களை காட்டி கொடுப்பது.

இவர்கள் தினமும் லஞ்சம் வாங்கி கொண்டு கண்டும் காணமல் இருக்கிறார்கள் . இவர்கள் முறைப்பாடு பார்க்க வருவார்களாம் பின்னர் நடவடிக்கை ஏதும் இடம் பெறாதாம்.

தேவைப்பட்டால் அப்பகுதி மக்களை இரகசிய முறையில் கேட்டால் தகவல் சொல்வார்கள்.

தற்போது சிலர் மறைமுகமாக தகவலை தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு அறிவித்து அவர் பார்வையிட்டு சென்றார் இன்னும் பிரச்சினை நிற்கவில்லை .

இதற்கு இராணுவ சிறப்பு படையணி STF தலையீடு மூலமே நிறுத்த முடியும் ஏன் எனில் அவர்கள் லஞ்சம் வாங்குவதில்லை. இவர்கள் இப்பகுதிகளில் தொடர் றோந்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் ஏன் எனில் இரவு பகல் தொடர்ந்து அயராது அகழ்வில் ஈடுபடுகிறனர்.

இவ் வளங்கள் சுரண்டல் கடந்த 4ஆண்டுகளாக தீவிரமடைந்துள்ளது

இதனுடன் சம்பந்தபட்ட திணைக்களங்களுக்கு மாதாந்தம் கப்ப பணம் போவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர்கள் கண்டு கொள்வதில்லை.

இதனால் இப்பகுதி வீதிகள் மிகவும் பாதிப்படைந்து வருகிறது . மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமம் எதிர் நோக்கிறனர்.

இ்ந்த வேலையை சிலர் தொழிலாக செய்கிறார்கள் இவர்கள் இனி மாற்று சுய தொழிலை கௌரவமாக செய்யும் வகையில் சமுதாயம் அவர்ளை ஏற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் இடம் பெறணும். நீதி மன்றங்கள் ஏன் இருப்பதோ தெரியவில்லை.

இப் பகுதிகளின் கிராமசேவகர்களும் இதை நிறுத்த தவறியுள்ளனர்

புதிய மாற்றத்திற்கான அரசியல் ஆட்சி தற்போது நடைபெறுகிறது மாற்றம் வருமா?
லஞ்ச ஊழல் ஒழிப்பு கொள்கை நடைமுறையில் இருக்கா? ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தென்மராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இது தெரியுமா? அல்லது தெரிந்தும் தெரியாது இருக்கின்றாரா? அல்லது அவர்களுடன் சேர்ந்து இவரும் கூட்டுக் களவானியா?

விரைவாக இப் பிரச்சினை அடியோடு நிறுத்த சம்மந்த பட்ட தரப்பு நடவடிக்கை எடுக்கவும்.

இந்த தகவல் இப்பகுதி மக்களிடம் கேட்கப்பட்ட போது சொல்லப்பட்டவை…