யாழ் மகாஜனா கல்லுாரி உப அதிபர் ஜெயந்தி மாரடைப்பு காரணமாக மரணம்!!
மகாஜனக் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியரும் உதவி அதிபருமான திருமதி ஜெயந்தி ஜெயதரன் இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தாயாராவார். மகாஜனாக் கல்லுாரியில் ஆசிரியையாக கடமையாற்றிய ஜெயந்தி அவர்கள், சுன்னாகம் மற்றும் அப்பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் பல்வேறு சமூகநலன் சார்ந்த அமைப்புக்களில் அங்கத்தவராக இருந்து அப்பகுதி மக்களுக்கு சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

