இணுவிலில் 26.03.2024 செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணியளவில் கே.கே.எஸ் வீதியில் JCB கனரக வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் சித்தப்பு என செல்லப்பெயரால் அழைக்கப்படும், 32 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான இணுவிலைச் சேர்ந்த முச்சக்கர வண்டியின் சாரதி ஆபத்தான கடும் காயங்களுக்கும் ஆபத்தான என்பு முறிவுகளுக்கும் உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியின் முன்பகுதி சப்பளிந்த நிலையில் அதற்குள் அகப்பட்ட சாரதியை அவரது நண்பர்கள் மிகவும் கடினப்பட்டு மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். வீதியில் அதிகளவான குருதி சிந்தப்பட்டிருந்தது.
JCB கனரக வாகனம் வீதிக்குக் கிழக்குப் பக்கமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டுக்குரிய தாரிடப்படாத நிலப்பகுதியில் பற்றைகளையும் சிறு மரங்களையும் அகற்றி மண்ணைக் கோதி மட்டப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
அவ்வேளை ஜே.வி.சி இன் நெம்பின் ஒரு பகுதியும் வெட்டி அள்ளும் பக்கெட் பகுதியும் வீதிக்கு குறுக்காக பல தடவைகள் நகரும் வகையில் ஜே.வி.சி யை இயக்கியவரால் செயற்படுத்தப்பட்டதாகவும் விபத்தின் பொழுது வீதியால் பயணித்த மற்றுமொரு சாரதி தெரிவித்தார்.
இந்த விபத்துத் தொடர்பான பின்புலம் மற்றும் ஏனைய விபரங்களை வம்பன் உறுதிப்படுத்த விரும்புகிறான். விபரம் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளவும்.





