Home புதினங்களின் சங்கமம் ஆமி பெரியவரான கணவனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு யாழ் மாணவனுடன் சிங்கள குடும்பப் பெண்...

ஆமி பெரியவரான கணவனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு யாழ் மாணவனுடன் சிங்கள குடும்பப் பெண் தலைமறைவு!!

சிங்கள சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.

கொழும்பு நாரேஹென்பிட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த இராணுவ அதிகாரியின் மனைவியான 33 வயது சிங்கள குடும்பப் பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கற்று வெளியேறியுள்ள மாணவன் ஒருவனுடன் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. மனைவி, இராணுவ அதிகாரியை விட்டு ஏற்கனவே சில மாதங்கள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.  இராணுவ அதிகாரி தனது மனைவியைக் கண்டுபிடிப்பதற்காக இரகசிய நடவடிக்கை ஒன்றை தனது இராணுவ, பொலிஸ் நட்பு வட்டாரத்தின் ஊடாக மேற்கொண்டுள்ளதாகவும் அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவனின் வீட்டுக்குச் சென்ற சிலர் குறித்த மாணவன் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகின்றது. இதே நேரம் தனது கணவனுக்கு வட்சப் மற்றும் மின்னஞ்சலில் கடிதம் எழுதி அனுப்பிவிட்டே மனைவி தலைமறைவாகியுள்ளாராம். இராணுவ அதிகாரியின் மனைவியை தொலைபேசியில் குறித்த அதிகாரியின் நண்பர்கள் தொடர்பு கொண்ட போது தான் அவருடன் வாழ விரும்பவில்லை எனவும் ஏற்கனவே விவாகரத்து செய்ய முயன்ற போதும் தனது பெற்றேரை துண்டி தடுத்து நிறுத்தினார் எனவும் மனைவி கூறியுள்ளாராம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments