புதினங்களின் சங்கமம்

இன்று யாழ் – கொழும்பு ரயிலில் ஏறிய சிங்கள மாணவர்களின் திருவிளையாடல்!! புகைப்படங்கள்

இன்று காலை யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில், கிளிநொச்சிப் பகுதியிலிருந்து ஏறிய சில சிங்கள இளைஞர்கள் தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யாழ் பல்கலைக்கழக பௌத்த சகோதரத்தவ சமூகம் என பெயரில் உள்ள எழுத்துப் பிழைகளுடன் கூடிய கடிதத்த தலைப்பைப் பயன்படுத்தி அதனைக் காட்டியே பஸ்களில் பயம் செய்பவர்களிடம் அச்சுறுத்தும் விதமாக நிதி பெற்று வருகின்றார்கள்.

சிங்களப் பிரதேசங்களில் இந்துக் கோவில்கள் அமைப்பதற்காக இவ்வாறு அவர்களின் பிரதேசத்தால் செல்கின்ற பஸ்களில் தமிழர்கள் நிதி திரட்ட முற்பட்டிருந்தால் அப்பகுதியில் உள்ள புத்த பிக்குகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் எவ்வாறான நடவடிக்கையை எடுத்திருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால் தமிழர் பிரதேசத்தில் இவ்வாறு நிதி வசூழிக்கும் இவர்களது இந்த நடவடிக்கை தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு, தமிழ் அரசியல்வாதிகள், இந்து மத ஆர்வலர்கள்  என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள்? என ரயிலில் பயணிப்பவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

May be an image of ticket stub and textMay be an image of 1 person, money, ticket stub and text that says "4754 තුමෝ බුද්ධාය! Μරයාපනය සරසවි බීමේ ඉදිවන මනරම් සරසවි විහාරයේ ධර්ම ශාලාවේ ඉතිරි වැඩ අවසන් කරගැතිමට ඉදlපම්නි"ෂවතින සරසව් විහාරයේ ධර්ම ශාලාවේ වැඩ අවසන් කර ගැනීමට තවත් රුපියල් ලක්ෂ ecturer/Civil Civil Engineering, WaSo Asia Project දහයක (රු.1,000,000.00) ක මුදලක් ඒ සඳහා ඇස්තමේන්තු වී ඇත. Engineering University of affna, ඒ සඳහා පිං කැමති ඔබත් හැකි අයුරින් දායක වන්න. viyalNagar, Kilinochchi. බෞද්ධ සහෝද සංගමය, යාපනය විශ්වවිද්‍යාලය දුරකථන -077 699 3908 රු.100/="