புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவிலிருந்து காதலனைத் தேடி வெள்ளவத்தை வந்த தமிழ் யுவதி ரொமினா மர்மமாக 13வது மாடியிலிருந்து வீழ்ந்து பலி!!

கொழும்பு, அல்விஸ் பிளேஸில் உள்ள ப்ளூ ஓஷன் வீட்டுத் தொகுதியில் தங்கியிருந்த இளம் யுவதியொருவர் 13வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார். இவர் பிரித்தானிய குடியுரிமை பெற்ற யுவதி.இந்த யுவதி நாளை மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் வசித்த இந்த யுவதிக்கு, பேஸ்புக் ஊடாக கொழும்பு வெள்ளவத்தைப் பகுதி இளைஞன் ஒருவருடன் காதல் வசப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை வந்துள்ளார். அதற்கு முன்னதாக இணையம் ஊடாக அல்விஸ் மாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பொன்றை முன்பதிவு செய்து பெற்றுள்ளார்.அந்த வீட்டில் காதலனுடன் தங்கியிருந்தார். காதலன் சட்டக்கல்லூரி மாணவர்.கலகிஸ்ஸ பதில் நீதவான் திருமதி ரத்னா கமகே நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்? குறித்த பெண்ணுடன் தங்கியிருந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

No photo description available.