புதினங்களின் சங்கமம்

கொழும்பில் இரு இளம் பெண் பொலிசாருக்கு குஞ்சுமணியை காட்டிவிட்டு ஓடியவருக்கு நடந்த கதி!!

கொழும்பு குணசிங்கபுர போக்குவரத்து சமிக்ஞை விளக்கிற்கு அருகில் இரண்டு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களிடம் தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து விட்டு ஓடிய 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒபேசேகரபுர, இராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர்.

கொழும்பு டி.ஐ.ஜி அலுவலகத்தில் கடமையாற்றும் இந்த இரண்டு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தமது கடமைகளை முடித்துக் கொண்டு கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் குணசிங்கபுர போக்குவரத்து சமிக்ஞை விளக்கிற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, ​​அருகில் நின்ற சந்தேக நபர் தனது காற்சட்டையை கழற்றி தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து விட்டு தப்பியோடியுள்ளார்.

இதைப் பார்த்த அந்தப் பகுதியிலிருந்தவர்கள், தப்பியோடிய மர்மநபரை துரத்திச் சென்று பிடித்து, புறக்கோட்டை பொலிசில் ஒப்படைத்தனர்.