புதினங்களின் சங்கமம்

கொழும்பில் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் பின்னணி இதோ!!

விருப்பமே இல்லாமல் தொழில் கட்டாயத்தில் பல உடல் ரீதியான இணைப்புகள் இருந்த போதும் மனரீதியான, உணர்வுபூர்வமான இணைப்புகளும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையில் இருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையே!

பாதுகாப்பு , கவுரவம், மரியாதை இவை அனைத்தும் யாருக்கு உரித்தானவை ? இவை அனைத்தும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகின்றதா , இவை அனைவருக்கும் சரிசமனாக கிடைக்கின்றதா ? என்ற எண்ணற்ற கேள்விகளுக்கு சரியான பதில்கள் இன்று வரை கிடைக்காமல் தான் உள்ளது.

உலகில் மிகவும் பண்டைய தொழிலாக கருதப்படும் பாலியல் தொழிலை ஆரம்ப காலங்களில் அரசர்களின் அந்தபுரங்களில் இருந்த பெண்கள் மாத்திரமே செய்துவந்தார்கள்.

பின்னர் சமகாலத்தில் பெண்கள், ஆண்கள் மற்றும் திருநங்கைகள் என முப்பாலினரும் இணைத்து இந்த தொழில் ஈடுபட்டு வருவதாக அறியப்படுகிறது.

இலங்கையை பொறுத்த வரையில் இந்த பாலியல் தொழிலானது மிகவும் இரகசியமான ஒன்றாக கருதப்படுகின்றது.

இந்த தொழிலை ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் செய்துவரும் நிலையில்
பெண்களை மாத்திரம் இந்த சமூகம் விபச்சாரி என இன்னும் பல பெயர்களை கொண்டு அழைக்கிறது.

இலங்கையில் சிலர் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் புரிந்துணர்வு அற்ற குடும்ப சூழல் காரணமாக இந்த பாலியல் தொழிலை தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலானோர் இந்த தொழிலில் அதிகளவான பணம் கிடைப்பதால் சமூகத்திற்கு பொருளாதார நெருக்கடி என பொய் கூறி இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள்

வன்முறைகளை அதிகமாக எதிர்கொள்பவர்கள் வரிசையில் முதலாவதாக இடம் பிடிப்பவர்கள் பாலியல் தொழிலார்களே.

இவர் எதிர்நோக்கும் வன்முறைகள் பெரும்பாலும் அலட்சியமாக பார்க்கப்படுகின்றது, காரணம் இவர்கள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள் இயல்பான ஒன்றாக பார்க்கப்படுகின்றது

பாலியல் தொழிலார்களுக்கும் உரிமைகள் இருக்கிறது. இருந்தலும் அதனை சமூகம் ஏற்க மறுப்பது கசப்பான உண்மை.

எந்தவிதமான சித்திரவதையை இவர்கள் எதிர்நோக்கினாலும் அவை கேள்விக்கு உட்படுத்தப்படுவதில்லை.

பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸாரால் இவர்களுக்கு ஏற்படுத்தப்படும் கொடூரம் கூட இன்றளவில் இயல்பானதாகிவிட்டது .

பெரும்பாலும் பாலியல் தொழிலை தவறு என கூறுவோரே இந்த சேவையை விரும்பி பெறுபவர்களாக இருக்கின்றனர்.

பாலியல் தொழிலை அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டு செயல்படுவோரை நம்பி ஒரு குடும்பமோ அல்லது தனி நபரோ வாழ்கின்றனர் .

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பெண் பாலியல் தொழிலார்களிடம் வினவிய போது அவர்கள் இந்த தொழிலுக்கு வந்த காரணமும் அவர்களின் வலி நிறைந்த குடும்ப பின்னணி தொடர்பில் எம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

“எனது பெயர் அஞ்சலி, எனக்கு இந்த தொழிலை செய்வதில் விருப்பம் இல்லை ஆனால் எனது குடும்பம் இந்த தொழிலின் மூலம் வரும் வருமானத்தில் தான் இயங்கி வருகிறது

இந்த தொழிலில் எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் எனது குடும்பத்திற்காக மனதை இறுக்கிக்கொண்டு இந்த தொழிலை செய்து வருகிறேன்

என்னை தேடிவரும் வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் நான் இருவருடன் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் அந்த நேரங்களில் நான் மிகவும் சிரமப்படுவேன் ஒரு முறை நான் அவர்களிடம் கழிவறை செல்வதாக பொய் கூறிவிட்டு தப்பித்து ஓடிவிட்டேன்

ஒருமுறை எனது கைப்பை மற்றும் தொலைபேசி திருடப்பட்ட போது நான் பொலிஸில் சென்று முறைப்பாடு வழங்கினேன் , ஆனால் அவர்கள் அதை ஒரு பொருட்டாக கூட எண்ணவில்லை , என்னை அடித்தார்கள் , எனது முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி என்னை வெளியில் போகுமாறு கூறிவிட்டார்கள்.

பொலிஸார் என்னை கைது செய்வதாக பல முறை பயமுறுத்தி என்னுடன் உறவில் ஈடுபட்டுள்ளார்கள் , என்னை உடல் ரீதியாக சித்திரவதையும் செய்துள்ளார்கள்.

நான் ஒருவரை காதலித்தேன், அவரிடம் என்னைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறினேன் அவர் என்னை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்.

எனக்கு அவரது காதல் மட்டும் போதும், நான் முகம்கொடுத்த அனைத்து துன்பங்களுக்கும் அவரது பரிவு, காதல், மருந்தாக இருந்தது.” என தெரிவித்தார்.