Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவில் பெரும் துயரம்; இரும்பு கதவு விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த 3 வயது லதுசிகன்.!

முல்லைத்தீவில் பெரும் துயரம்; இரும்பு கதவு விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த 3 வயது லதுசிகன்.!

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் வீட்டின் இருப்பு கதவு சிறுவன் மீது வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இன்று (14) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த 3 வயது நிரம்பில ஆதவன் லிதுசிகன் என்ற சிறுவன் வீட்டு கேற்றில் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற் (இரும்பு கதவு) சிறுவன் மீது வீழ்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.