யாழ் இந்துமகளீர் கல்லுாரி வாசலில் பொலிசாரும் பார்த்திருக்க நடக்கும் அலங்கோல வேலை!! (வீடியோ)
நல்லுார் அரசடி வீதி பலாலிவீதியை குறுக்கறுத்து தட்டாதெருச் சந்திவரை நீண்டு செல்கின்றது. குறித்த வீதியில் நல்லுாரிலிருந்து தட்டாதெரு செல்லும் போது பலாலி வீதி தாண்டிய பின் யாழ் இந்துக்கல்லுாரி, யாழ் இந்துமகளீர் கல்லுாரி, யாழ் இந்து ஆரம்பபாடசாலை, யாழ் இந்துமகளீர் ஆரம்பபாடசாலை என மிக முக்கியமான 4 பாடசாலைகள் உள்ளன. பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும் பாடசாலை விடும் நேரத்திலும் குறித்த வீதி மிகவும் போக்குவரத்து நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. குறித்த வீதியில் பாடசாலை நேரத்தில் கனரக வாகனங்கள் செல்லத்தடை என்ற அறிவிப்பு காணப்படுகின்றது. ஆனாலும் அந்த வீதியில் பாடசாலை ஆரம்பிக்கும், முடிவடையும் நேரத்தில் கனரகவாகனங்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் செல்கின்றன. அதுவும் போக்குவரத்து பொலிசார் பாடசாலைக் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே இவ்வாறான கனரக வாகனங்கள் அப்பகுதியால் செல்கின்றன.
அத்துடன் பாடசாலை சேவையில் ஈடுபடும் பேரூந்துகளும் பாடசாலை வாசலில் வைத்தே அதுவும் நிற்காது ஓட ஓட மாணவிகளை ஏற்றிச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய பின் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு சம்மந்தப்பட்ட தரப்புக்கள் காத்திருக்கின்றனவா?



