யாழ்ப்பாணத்தில் நாளை பச்சைக் கள்ளர்கள் இந்த இடத்தில் ஒன்று கூடுகின்றார்கள்!! பொலிசார் பிடிப்பார்களா?
யாழ் இருபாலை சந்திக்கு வடக்கே பருத்தித்துறை வீதியில் உள்ள பேச்சிஅம்மன் ஆலயத்திற்கு அருகே UTT hotalக்கு எதிர்ப்பக்கத்தில் போலியான பெயர்ப்பலகையுடன் கூடிய இடத்தில் நாளை (ஞாயிறு) இலங்கையில் உள்ள மிகப் பெரும் மோசடிகாரர்கள் ஒன்று கூடவுள்ளார்கள். bitcoin எனப்படும் மாயையான பணப் பெறுமதிகள் மூலம் பெருமளவு பணத்தை உழைக்கலாம் என கூறி படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரையான அனைவரையும் தங்களது கவர்ச்சிகரமான பேச்சின் மூலம் மடக்கிவிடுவார்கள். அதன் பின்னர் அவர்களிடமிருந்து டொலர்களாக பணத்தைப் பெற்றுக் கொண்டு தவணை அடிப்படையில் டொலர்களாகவே உங்களுக்கு பணம் வரும் என ஏமாற்றி அவர்களை முற்று முழுதாக நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள். பிரமிட் எனப்படும் செயற்பாட்டின் இன்னொரு வடிவமாக இருக்கும் இந்த பிட்கொயின் ஏமாற்று பித்தலாட்ட வேலைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் மயங்க வேண்டாம் என இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் தெரிவித்துள்ளார்கள். நாளை குறித்த இடத்தில் நடக்கும் இந்த செயற்பாட்டுக்கு பொலிசாரிடம் முறையிட சிலர் ஆயத்தமாகியுள்ளார்கள். அத்துடன் நாட்டை விட்டு பெருமளவு டொலர்களை வெளியேற்றும் இவ்வாறான செயற்பாட்டுக்கு வங்கிகளின் சில அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன. இது தொடர்பாக மத்தியவங்கி அவதானம் செலுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளார்கள்.


