புதினங்களின் சங்கமம்

என் குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்தே ரயிலில் விட்டுச் சென்றேன் ; தாய் வாக்குமூலம்

ரயிலின் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்து அப்படி விட்டுக் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
நேற்று (10) இரவு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் கூடையொன்றில் இருந்து குறித்த சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிசுவின் பெற்றோரான தம்பதி 26 வயதுடைய திருமணமாகாதர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மீனகய ரயிலில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் ரயில் அதிகாரிகளும் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் சிசுவின் பெற்றோரை கண்டறிய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த யுவதிக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வந்து கொழும்பு பகுதியில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 25ம் திகதி குழந்தை பிறந்துள்ள நிலையில், நேற்று ரயிலில் விடப்பட்டுள்ளது.
பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லவிருந்த புகையிரதத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தேக நபர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் 4ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர் என தெரியவந்துள்ளது.

May be an image of 5 people, people standing and indoor

கொஸ்லந்த மீரியபெத்த பிரதேசத்தில் வைத்து 25 வயதுடைய நபர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர், தனது காதலியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், காதலி வீட்டிற்கு செல்ல விரும்புவதாக கூறியதால் குழந்தையை ரயிலில் விட்டு சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தெஹிவளை பகுதியில் வாடகை அடிப்படையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்திற்குரிய பல்கலைக்கழக மாணவர் இணையத்தில் பணிபுரிந்து வருவதும், குழந்தை வைக்கப்பட்டிருந்த கூடை ஒன்லைனில் ஓர்டர் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் குழந்தையையும் காதலியையும் ஏற்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருமணம் ஆகாததால் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியவில்லையென்றும், ரயிலில் வைத்தால் யாராவது எடுத்துச் சென்று குழந்தையை பத்திரமாக வளர்ப்பார்கள் என நம்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

சிசுவின் தாயாரான 25 வயது யுவதியும் இதையே தெரிவித்துள்ளார்.

குழந்தையை பொறுப்பேற்க விரும்புவதாக தாயாரும் தெரிவித்துள்ளார்.

நேற்று (10) அதிகாலை 2 மணியளவில் மட்டக்களப்பு நோக்கிப் புறப்படவிருந்த புகையிரதத்தின் மலசலகூடத்தில் சிசுவை விடப்பட்ட போது பயணி ஒருவர் சிசுவைக் கண்டு புகையிரத அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அதன்பிறகு குழந்தையின் பொலிசார் விசாரணை நடத்தி, பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தையை ரயில் கழிவறையில் தந்தையே விட்டுச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காதலியிடமிருந்து இளைஞன் குழந்தையை பெற்றுக்கொண்டு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த புகையிரதத்தின் கழிவறையில் வைத்து விட்டு கொஸ்லந்த பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமிக்கு குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, கொழும்புக்கு அழைத்து வந்து தெஹிவளை பகுதியில் தங்கியிருந்துள்ளார்.

மேலும் கர்ப்பிணி காதலிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

புகையிரத மலசலகூடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசு நேற்று மதியம் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, பின்னர் பொது விடுதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

May be an image of 1 person and babyMay be an image of 2 people, people standing and indoorMay be an image of 2 people, child, people standing and indoorMay be an image of 1 person, indoor and hospitalMay be an image of 1 person and child