புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்த அரச பஸ் பளையில் தடம்புரண்டது!! ஒருவர் பலி!! பலர் காயம்!! Video

கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 4 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
May be an image of 5 peopleNo photo description available.May be an image of 10 people and people standingMay be an image of 3 people, people standing and indoor