புதினங்களின் சங்கமம்

யாழில் மனைவி, பிள்ளையை துரத்தித் துரத்தி வாளால் வெட்டிய கணவன் அயலவர்களால் பிடிக்கப்பட்டான்!!

யாழ்.வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் மனைவி மற்றும் மகளை வாளால் வெட்டிய கணவன் தப்பிச்செல்ல முயற்சித்தபோது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த தாயும், மகளும் நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.