தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான கல்மெடியாவ தெற்கை சேர்ந்த பியதிஸ்ஸ பண்டார வயது என்பவரே யானைக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
கடந்த வெள்ளிக் கிழமை விறகு எடுக்கச் சென்றவரே மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாததனால் அவரை தேடிச் சென்ற வேலையிலேயே ஈச்சக்குளத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தம்பலகாமம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




