புதினங்களின் சங்கமம்

தென்னிலங்கை வன்முறையாளர்களை விட பிரபாகரன் மேலானவர்..!

இலங்கையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது.

அவ்வாறானதொரு நடவடிக்கையை மீண்டும் ஏற்படுத்தவே போராட்டம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் பலத்துடன் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் இந்த போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன.

இது பாரிய நிலைமையாகும் நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் ஆணைமூலம் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பங்கரமான நிலைமையாகும்.

மேலும், போராட்டத்துக்குள் பயங்கரவாதிகளும் நுழைந்திருக்கின்றனர். உண்மையான போராட்டக்கார்களின் தலைவர்களுடன் நான் கலந்துரையாடி இருக்கின்றேன்.

அவர்களுடன் இணக்கப்படாட்டுக்கு நாங்கள் வந்தோம். அவர்களின் கோரிக்கையாக இருந்தது முன்னாள் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்பதாகும். அதுவரைக்கும் அவர்களின் போராட்டம் வெற்றிபெற்றது.

பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை ஏற்படுத்தியது. 400 பஸ்கள் எரிக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் மாற்றிகளை அழித்தார்கள். 40க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகளுக்கு தீ வைத்தார்கள். 12 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவம் மற்றும் பொலிஸாரை கொலை செய்தார்கள்,என்று தெரிவித்தார்.