புதினங்களின் சங்கமம்

புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்து உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் – புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 50 அகவையுடைய டா.டேவிட் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குளத்தின் கரையில் இவரின் மிதிவண்டி மற்றும் செருப்பு, சறம் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஹேரத் குளத்தில் இறங்கி சடலத்தினை மீட்டு எடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகைள புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருவதாககவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.