Vampan memesபுதினங்களின் சங்கமம்

இந்தக் கடிதம் எப்போதாவது உங்கள் கையில் கிடைக்கும் போது நான் இலங்கையில் ஏதாவது ஒரு கியூவில் நின்று கொண்டிருப்பேன்!

போகாதே போகாதே என்று நீங்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ஆதியில் அனுமான் சீதையைக் காணத் தூது போன தேசத்தை நானும் எப்படியாவது பார்க்க ஆசைப்பட்டு வந்தது தப்பாகப் போய்விட்டது!
ராவணன் ஆண்ட நாட்டை தற்போது ஆளும்
69 லட்ச மக்களின் அபிமானம் வென்ற
தலைவரைக் காணலாம் என்று காத்திருந்து காத்திருந்து காலம்தான் போகிறது! என்
அதிர்ஷ்டம் அவ்வளவுதான்! அவரைத்தான் காணமுடியவில்லை!
ஆனால் அவரது நாட்டில் திரும்பும் திசையெல்லாம் ஜனங்கள் எதற்காகவாவது பகலிரவு பாராமல் ஏதாவது வரிசையில் நின்று கொண்டே இருக்கிறார்கள்! நானும் அவர்களோடுதான்இப்போது நிற்கிறேன் கப்பலேறி வர கையில் பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு!
எல்லோரும் கப்பல் இன்று வரும்..நாளை வரும்..அடுத்த வாரம் வரும்..அடுத்த மாதம்
வரும்..கப்பல் வரும்.. கப்பல் வரும் என்று சொல்லிச் சொல்லியே நாட்கள் போகின்றன.. கப்பல் எப்போது வருமோ அப்போது வந்து சேர்கிறேன்!
நமது பிள்ளையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!
ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டியதில்லை!
இங்கேயும் யாரும் ஸ்கூல் படிப்பைப் பற்றி
யோசிப்பதில்லை.. எல்லோரும் கியூவில் குடும்பத்தோடு நிற்பதுதான் தெரிகிறது!
நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. எல்லாம் முடிந்து போகும்!??
மஹதிஹாசன் இப்ராஹிம்.