இன்றிரவு 10 மணி முதல் 30ம் திகதிவரை பொது முடக்கம்!!
கொரோனாப் பரவல் தீவிரத்தை அடுத்து பொது முடக்கம் குறித்த அறிவிப்பை அரசாங்கம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 04மணி வரை குறித்த முடக்கம் நீடிக்கும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சற்று முன்னர் தன்னுடைய ருவிற்றரில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் அத்தியாவசிய சேவைகள் வழமையாக நடைபெறும் என்றும் சட்டத்தை மதித்து மக்களை வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

