தென்மராட்சியின் பாலாவி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த உழவூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உழவூர்தியை நிறுத்துமாறு படைத்தரப்பினர் வலியுறுத்தியபோதிலும் நிறுத்தாமல் சென்றதாலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உழவூர்தியை செலுத்திச் சென்றவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கொடிகாமம் பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.





